திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அந்த திறமையை எத்தனை பேர் வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்… ஆசைப்பட்டால் மட்டும் போதுமா அதை எத்தனை பேர் செயல்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்வி…
பாஸ்கர் சென்னை ஐசிஎப்பில் பணியாற்றுகிறார். இவரின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் இவருடைய தாயும், மனைவியும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
பாஸ்கருக்கு எல்லா இளைஞர்களையும் போல உடலை ஏற்ற வேண்டும் என்று ஆசை இருந்தது. 1997ல் இவர் ஜிம்மில் சேர்ந்துள்ளார். உயரம் குறைவாக இருப்பதால் வேகமாக உடல் அவருக்கு ஏறியது.
தன்னுடைய தன்னம்பிக்கையை தளர விடாமல் பாடி பில்டிங்கில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் வந்தது,
விளையாட்டுத்துறையில் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் பாடி பில்டிங் துறைக்கு அந்த அளவுக்கு முக்கியம் இல்லை.
பாடி பில்டிங் துறைக்கு பல ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படவில்லை. 2003ல் தெற்காசியாவில் நடைபெற்ற போட்டியில் பாஸ்கர் தங்கம் வென்றார்.
பின்னர் 2018ம் ஆண்டு உலக அரங்கில் பாஸ்கர் தங்கம் வென்றார். பல கஷ்டங்களை தாண்டி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் அர்ஜுனா கடந்த ஆண்டு விருது கிடைத்தது.
ரயில்வேயில் அர்ஜுனா விருது பெற்ற முதல் நபர் இவர்தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஸ்கருக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்தார்.
பாடி பில்டிங் அகாடமி நடத்தி வரும் இவர் அகாடமி மூலம் பல இளைஞர்களுக்கு பாடி பில்டிங் துறையில் ஊக்குவித்து வருகிறார்.