Loading...
கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுப்பதுடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதர்கு முக்கிய காரணம் சாக்லேட் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...
டார்க் சாக்லேட் சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது. மேலும் இந்த சாக்லேட்டுகள் 70 சதவீதம் இதயநோயை குறைக்கிறது.
மேலும் இது குறித்த ஆய்வின் மூலம் சாக்லேட்டானது, புற்று நோய் வராமல் தடுக்கிறது என்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுவதால், குறைப்பிரசவம் தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைப்பிரசவம் ஏற்பட என்ன காரணம்?
- பொதுவாக, வலிப்பு நோய், ரத்தம் உறைதல், கல்லிரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகள் காரணமாக தான் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது.
- தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது, அதன் மூலம் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருப்பதாலும் குறைப்பிரசவம் ஏற்பட காரணமாக உள்ளது. இதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
- சாக்லேட்டில் இருக்கும் கோகோ என்னும் வேதிப்பொருட்கள் இது போன்ற பிரச்சனைகளை நீக்கி,ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு உதவுகின்றது.
- கர்ப்பிணி பெண்கள் வாரத்துக்கு 3 நாட்களாவது டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும். இதனால் தாய் மற்றும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
Loading...