இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொது மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திருநெல்வேலி சந்தைப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் குவிந்துள்ளதுடன் அப்பகுதியில் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதேவேளை, யாழ். நகர்ப் பகுதியிலும் பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.