கனடிய பிரமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எட்டுவயது சிறுவன் ஒருவன் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் சமூக வலைத்தளத்தில் பதில் வழங்கியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophieவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், பிரதமரின் மனைவியின் நிலை தொடர்பில், எட்டு வயது சிறுவன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறான்.
அக்கடிதத்தினை அந்தச் சிறுவனின் தந்தை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
குறித்த சிறுவன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
Thanks for your letter, Michael – Sophie feels better and I feel just fine. We’re working super hard to slow down the spread of COVID-19 and keep you, your grandparents, and all Canadians safe. And there are so many medical professionals across the country focused on that too. https://t.co/MQTtl1cQRb
— Justin Trudeau (@JustinTrudeau) March 19, 2020
“உங்கள் மனைவி தற்போது நலமாக இருக்கிறார் என நம்புகிறேன். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது, உங்களுக்கு அந்த வைரஸ் வரக்கூடாது என விரும்புகிறேன்.
உங்களிடம் கொரோனா வைரஸ் குறித்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். வைரஸ் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளீர்கள்
என் தாத்தா, பாட்டிக்கு கொரோனா வருவதை விரும்பவில்லை, உங்களின் கடின உழைப்புக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளான்.
இதற்கு டுவிட்டர் வழியே பதிலளித்த ட்ரூடோ, உங்கள் கடிதத்துக்கு நன்றி மைக்கேல். என் மனைவி Sophie நன்றாக உள்ளார்.
நானும் நலமாக உள்ளேன், கொரோனாவை கட்டுபடுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். உங்கள் தாத்தா, பாட்டி மற்றும் கனடியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.