உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, இதுவரை 90,000 ஆயிரம் பேரை பாதித்துள்ளது. 10,062 பேர் இறந்துள்ளனர். சீனா, இத்தாலி-யை தொடர்ந்து இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் எப்படி ஆய்வாளர்கள் கண்டறியப்படுகிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.
குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் இருக்குமோ என்று சந்தேகம் எழும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அதன் படி நோயாளிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரியை கொண்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ரத்தத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறிய ஆய்வகத்தில் ஆய்வு முடிந்த பின்னர் அதில் குறிப்பிட்ட மாற்றம் நிகழ்கிறதா என்பதை கண்டறிய 48 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
மேலும், சீனாவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்குள்ளானவரின் ரத்தமாதிரியுடன் ஒத்துப் போனால் பாசிட்டிவ் அதாவது கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை உறுதி படுத்தும் விதமாக சிவப்பு வண்ணத்தில் கோடு ஒன்று மேல் நோக்கி செல்வது போல குறிப்பிட படுகின்றது.
ஒரு வேளை ஆய்வு முடிவிற்கு பின்னர் அது சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தால் கிடை மட்டமாக மெல்லிய கருப்பு வண்ண கோடு குறிப்பிடப் படுவதாக ஆய்வக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் 2 தினங்கள் கழித்துதான் உறுதி செய்யப்படும். இதனால், தினமும் குறைந்த பட்சம் 10 முறையாவது சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை கழுவவதோடு, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.