இந்தியாவை சேர்ந்த புதுமணத்தம்பதி மலேசியாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பல்லபி என்ற இளம்பெண்ணுக்கும் சங்கர் என்ற இளைஞனுக்கும் கடந்த 26ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுமணத்தம்பதி கடந்த 12ஆம் திகதி மலேசியாவுக்கு தேனிலவுக்கு சென்றனர்.
பின்னர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப கடந்த 17ஆம் திகதி விமான நிலையத்துக்கு இருவரும் வந்த போது கொரோனா பீதியால் விமானம் ரத்தானதால் அவர்களால் கிளம்ப முடியவில்லை.
இதையடுத்து மீண்டும் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விசாகபட்டினம் வர விமான டிக்கெட் வாங்கிய நிலையில் அந்த விமானமும் கொரோனா பிரச்சனையில் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மூன்றாவது முறையும் சிங்கப்பூர் வழியாக அம்ரிட்ஸ்டர் வர சங்கர், பல்லபி டிக்கெட் எடுத்த நிலையில் அந்த விமானமும் ரத்தானது.
இதன் காரணமாக தங்களிடம் இருந்த பணம் கிட்டத்தட்ட அனைத்தும் செலவாகிவிட்டதால் இருவரும் செய்வதறியாமல் விமான நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்திய அரசு தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பெண் பல்லபி உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.