20 லட்சம் பணம் தரவில்லை என்றால் உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என கணவனே, மனைவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூர் கிரிநகர் பகுதியை சேர்ந்தார் நிஷா (37). இவர் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழந்துவரும் நிஷா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நிஷாவுக்கும் மதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனிடையே, திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்திய நிலையில் இந்த விவகாரம் மதனின் குடும்பத்துக்கு தெரியவர, அவர்கள் மதனுக்கு திருமணம் செய்ய வேறொரு பெண் பார்த்துள்ளனர்.
இதற்கு மதனும் சம்மதம் தெரிவித்ததை அறிந்துகொண்ட நிஷா, இதுகுறித்து மதனிடம் கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மதன் நிஷாவிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால், உனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மன ரீதியாகவும், உடல் ரீதியகவும் மிரட்டியுள்ளார் மதன்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிஷா, இதுகுறித்து பெங்களூர் கிரிநகர் போலீசில் மதன் மீது புகார் அளித்துள்ளார்.
தற்போது இதுகுறித்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.