தமிழ் பல ஆண்டுகளாக பிற மொழிகளில் வெற்றியடைந்த திரைப்படங்களை, தமிழில் ரீமேக் செய்து வெளியாவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சனின் திரைப்படங்களை தமிழில் அதிகமாக ரீமேக் செய்து உள்ளனர்.
மேலும், தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யும், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக்கான கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவை சேர்ந்த பல ஹீரோக்கள் ரீமேக் திரைப்படங்கலில் நடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் 2018ல் அயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான விக்கி டோனர் திரைப்படத்தின் ரீமேக்காக தாராள பிரபு திரைப்படம் வெளியானது.
மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த், அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்கில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடித்த சார்லி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னடத்தில் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கில் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடித்து வருகின்றனர்.
பெல் பாட்டம் ரீமேக்கில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார், இஷ்க் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் கதிர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.