பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் சகல உணவகங்கள் மதுபானசாலைகள் மற்றும் கபே ஆகியன மூடப்படுகின்றன.
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 40 க்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்பின்னர் மொத்தமாக 184 மரணங்கள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதில் லண்டனில் மட்டும் 18 மரணங்கள் பதிவாகியுள்ளதால் லண்டன் நகரும் விரைவில் முடக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பிரித்தானியாவில் நாடளாவியரீதியில் இன்றிரவு முதல் சகல உணவகங்கள் மதுபானசாலைகள் மற்றும் கபே ஆகியன மூடப்படுவதாக இன்றிரவு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலைவாய்ப்புக்களை இழக்கும் ஊழியர்களுக்கு 80 வீத வேதனம் வழங்கப்படுமெனவும் பிரித்தானிய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.