நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ மனைகள் அமைக்கப் பட்டுள்ளன.
வெலிகந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவம் செய்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட விஷேட பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனை இலங்கை இராணுவம் 72 மணிநேரத்தில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதனையடுத்து குறித்த பிரிவை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு முழுமையாக இராணுவத்தின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் மேலும் வெளியான சில தகவல்கள்..
மக்கள் பெருமளவில் ஒன்று கூடுவது நோய் பரவுவதற்குக் காரணமாகும் என சுகாதார அமைப்பினால் அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளதாகவும் மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப் பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பேருந்து மற்றும் ரயில் சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது