கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்து உருக்கமாக பேசிய பெண்ணின் வீடியோ வைரலான நிலையில் அது கனடிய பிரதமரின் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் ஒரு பெண் மருத்துவமனையில் இருந்தபடி மூக்கில் சுவாசக்குழாயை பொருத்தி கொண்டு பேசும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது.
அதில் அவர் பேசுகையில், இன்னும் யாராவது புகைப்படித்தால் தயவு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டு விடுங்கள், ஏனெனில் நுரையீரல் மிகவும் முக்கியம் என தான் படும் அவஸ்தை தொடர்பாக பேசினார்.
இந்த வீடியோவில் தோன்றிய பெண் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie தான் என கூறப்பட்ட நிலையே இது வைரலானது.
இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து Daily Mail பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது வீடியோவில் உள்ள பெண்ணின் பெயர் Tara Lane Langston (39) எனவும் அவர் மேற்கு லண்டனை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பெண் ஹில்லிங்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sophie Trudeau. (wife of Canada ?? PM ) – Her message pic.twitter.com/K2O0aGdsrJ
— Hena sadiq Haider (@HenaSadiq) March 21, 2020