கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதருமான த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கைகழுவுவது, பொது இடங்களில் இருமல் மற்றும் தும்மல் வந்தால் செய்ய வேண்டியது குறித்து பேசியுள்ளார்.
இந்த வீடியோவை யுனிசெப் இந்தியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
@trishtrashers #UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN @DrBeelaIAS @VijayaBaskarofl pic.twitter.com/5V4E05UfhQ— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020