கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர்ந்த நபர் செய்த செயல் கண்ணீர் வரும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாக, பாதித்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அதிலும், தலைநகர் பெங்களூர், ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதி என்பதால், வெளிநாட்டில் இருந்து, ஒருவரிடமிருந்து எளிதாக நிறைய பேருக்கு பரவிவிட்டது. இந்தநிலையில் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இது பெங்களூரில் எந்த பகுதி என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நபர் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர்ந்து ஆம்புலன்சுக்கு போன் செய்து அதை சம்பவ இடத்திற்கு வர வைக்கிறார். ஒரு சாலை அருகே அவர் நின்று கொண்டிருந்த நிலையில் ஆம்புலன்ஸ் வந்ததும் ஏறி உட்காருகிறார்.
இதன்பிறகு ஆம்புலன்ஸ் கதவுகள் பூட்டப்பட்டு வண்டி நகர்கிறது.
அந்த ஆம்புலன்ஸ், எம்.எஸ்.ராமையா என்ற தனியார் மருத்துவமனைக்கு சொந்தமானது. இது பெங்களூரில் யஸ்வந்தபுரம் என்ற, பகுதியில் அமைந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர் உடலை முழுக்க மறைக்கும் ஆடையை அணிந்தபடி, முகக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது தெரியவந்துள்ளது.