திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான ஒருவரை இனங்கண்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் கொஸ்தா தெரிவித்தார்.
குறித்த கொரொனா தொற்றுக்கிலக்கான நபர் ஜயந்திபுர, வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் எனவும் இவர் ஹபரன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் ஜயந்திபுரவிற்கு சென்ற நிலையில் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம்(21) கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் கொரொனா வைரஸ் தொற்றுக்கிலக்காகியுள்ளதாககவும் கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
இன்று(21) மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு கொரோனா மத்திய பரிசோதனை நிலையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.