தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் எர்ணாமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ஜெயபால் (வயது 27). அத்திமூர் கிராமத்தை சேர்ந்தவரான பாபு என்பவரின் மகள் சிவரஞ்சனி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் வருடத்தின், ஜூன் மாதத்தில் 14 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. சிவரஞ்சினியிடம் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதியன்று சிவரஞ்சனி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிவரஞ்சினியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவரஞ்சினியின் கணவர் மற்றும் பெற்றோரை கைது செய்ய கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேசுவதை நடத்தினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து ஜெயபாலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.