தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் 22ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிற்குளே இருந்த சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு இந்திய பிரமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
#coronaupdate: A traveller from Spain tests #Covid_19 positive. Patient is undergoing treatment in isolation. @MoHFW_INDIA #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
அதன் படி இன்று இந்தியா முழுவதும் மக்கள் தானாகவே சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து தமிழகத்திற்கு வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதாகவும். நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா உறுதிசெய்யபப்பட்ட 6 பேரும், வைரஸ் தொற்று பரவிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு எங்கள் கண்காணிப்பில் உள்ளனர். ரயில் நிலையம் மற்றும் உள்ளுர் எல்லைகள் உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் ஸ்கிரீனிங் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.