Loading...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற இரண்டு விமானங்கள் மீண்டும் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னையில் வர்தா புயல் அச்சம் காரணமாகவே குறித்த விமானங்கள் மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் வர்தா புயல் அச்சம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும், கொழும்பிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சற்று அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Loading...