தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்கமைய இந்த வைரஸ் தொற்று மிக வேகமாக பரவ கூடும்.
ஒரு நோயாளியினால் ஒரு மாதத்திற்குள் 406 பேருக்கு பரவ கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருந்த பாதெனியா தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 எனும் கொரோனா தடுப்பு பிரிவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்கமைய கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவக் கூடும். ஒரு நோயாளியினால் ஒரு மாதத்திற்குள் 406 பேருக்கு பரவக் கூடும்.
எனவே எமது நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
ஊரடங்கு சட்டத்தை நீக்கினாலும் முடிந்தளவு வீட்டில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவசியமான பணிகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.