ஜேர்மனியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள அறிகுறிகளைக் காட்டுகிறது என்று அந்நாட்டு பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இது நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விலகல் நடவடிக்கைகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்..
ஜேர்மனியில் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்தது என்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம் என்று ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் கூறினார்.
ஆனால் புதன்கிழமை மட்டுமே இந்த நிலவரம் என்று என்னால் உறுதியாக உறுதிப்படுத்த முடியும்.
பள்ளி மூடல்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை கடுமையாகக் குறைத்தல் உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்திய முதல் ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும்.
தற்போது, ஜேர்மனியில் மொத்தம் 24,904 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 94 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 266 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.
இதற்கிடையில், ஜேர்மன் அதிபர் மெர்க்கலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு பின்னர் நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக மெர்க்கல் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.