செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் தவிர மிகுதி கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முடங்கு நிலை மூன்று வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் அத்தியாவசிய பணிகளைச் சேய்வோர் தவிர வேறு யாரும் வீதிகளில் நடமாடமுடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மிக வேகமாகப் பரவிவரும் கொறோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.