Loading...
ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த மதுபான சாலை ஒன்று திருகோணமலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருக்கும் நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அவ்வாறிருக்க சட்டவிரோதமான முறையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
Loading...
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விற்பனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை கையகப்படுத்தியதோடு அங்கிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மொத்தமாக 200க்கும் அதிக மதுபான போத்தல்களும் 200,930 பெறுமதியான பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...