ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி வைத்தே தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். இந்நிலையில் 2000க்கு பிறகு எந்த நடிகர்கள் எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
ரஜினி
ரஜினி 2000 க்கு பிறகு 7 படங்களில் நடித்துள்ளார். இதில் குசேலன், கோச்சடையான், லிங்கா என 3 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
கமல்
கமல்ஹாசன் 2000க்கு பிறகு 17 படங்களில் நடித்துள்ளார், இதில் ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, உத்தம வில்லன் ,தூங்கா வனம் என 7 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விஜய்
இளைய தளபதி விஜய் 2000க்கு பிறகு தான் 32 படங்களில் நடித்துள்ளார், இதில் கண்ணுக்குள் நிலவு, தமிழன், பகவதி, புதிய கீதை, உதயா, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, புலி என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
அஜித்
அஜித் 2000க்கு பிறகு 27 படங்கள் வரை நடித்துள்ளார், இதில் ரெட், ராஜா, என்னை தாலாட்ட வருவாளா, ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், ஆழ்வார், ஏகன், அசல், பில்லா-2, கிரீடம் என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விக்ரம்
விக்ரம் 2000க்கு பிறகு 23 படங்களில் நடித்துள்ளார், இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமுராய், கிங், காதல் சடுகுடு, அருள், கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள என 11 தோல்வி படங்கள் கொடுத்துள்ளார்.
சூர்யா
சூர்யா 2000க்கு பிறகு 25 படங்கள் நடித்துள்ளார், இதில் உயிரிலே கலந்தது, நந்தா, ஸ்ரீ, ஆயுத எழுத்து, மாயாவி, மாற்றான், அஞ்சான், மாஸ் என 8 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் இந்த நடிகர்கள் தமிழில் மட்டும் நடித்த படங்கள் மற்றும் கெஸ்ட் ரோல் அல்லாது ஹீரோவாக நடித்த படங்கள் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.