கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர்.
உலக நாடுகளில் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் இதுவரை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரோம் சொலமன், கொரோனா தாக்கிய நோயாளிகளை ஆய்வு செய்த போது, வாசனை அறியும் திறனை இழப்பதும் கொரோனாவுக்கான அறிகுறி என கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஏற்கனவே கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இதுவும் சேர்க்கப்படுவதாக பிரான்ஸ் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின் முடிவை, பிரிட்டன் வைத்தியர்களும் ஆமோதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.