உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு 1000 பேருக்கு மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனால் அந்த மாநில அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் திணறி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
எனினும், பிரான்ஸில் இருந்து கடந்த 8 நாட்களுக்கு முன் ஒருவர் ஐதராபாத் வந்துள்ளார். இவரை அவரது பிளாட்டில் தனிமையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அந்த நபர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மார்ச் 19ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக அதை நிறுத்தியுள்ளனர்.
அந்த நபருக்கு இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால் இது நினைத்துக்கூட பார்க்க முடியாத பேராபத்தாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அதிகாரிகள் தலைவலி ஏற்பட்டுள்ளது.