சென்னையைத் தாக்கி வரும் வர்தா புயலுக்கு இந்த முறை பாகிஸ்தான் பெயர் வைத்துள்ளது. வர்தா என்றால் சிவப்பு ரோஜா என்று அர்த்தம் உள்ளது.
தமிழகத்தின் வடக்கு சென்னை மற்றும் ஆந்திரப்பிரதேசத்தை தாக்கி வரும் வர்தா புயலால், கரையைக் கடக்கும்போது மற்றும் கடந்த பின்னரும் பயங்கர மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய கடல் மண்டலத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலைத்தீவு, ஓமன் ஆகிய 8 நாடுகளின் மொழியில் புயல்களுக்கு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் பெயர் இட்டுள்ளது. கடந்த முறை நாடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் வைத்து இருந்தது.
பாகிஸ்தானின் பெயர் வைத்ததால் தானோ என்னமோ இந்த அளவிற்கு வர்தா புயல் கோரத்தாண்டவமாடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.