விக்கல் மனிதனுக்கு சிக்கல்! ஆம், இந்த விக்கலானது திடீரென வரும். சிலசமயம் உடனே நின்று விடும், சில சமயம் தொடர்ந்து கொண்டே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும் என பலர் கூறுவார்கள். கீழே சொல்லப்பட்ட சில விடயங்களை செய்தால் விக்கல் உடனே நிற்கும் தெரியுமா?
மூச்சை பிடித்தல்
சிலருக்கு விக்கல் உடனே நிற்காமால் தொடரும். அப்படிப்பட்ட நேரத்தில் சில விநாடிகள் மூச்சை பிடித்து கொண்டால் விக்கல் நின்றுவிடும்.
விரல் வைத்து அழுத்துவது
விக்கல் ஏற்படும் சமயத்தில் ஆள்காட்டி விரலை மூக்கு நுனிக்கு கீழ் அதாவது, மேல் உதட்டுக்கு மேலே வைத்து 30 விநாடிகளுக்கு விரலை எடுக்காமல் அழுத்த வேண்டும். இப்படி செய்தால் விக்கல் நிற்கும்.
நெஞ்சு பகுதியை அழுத்துவது
திடீரென விக்கல் ஏற்பட்டால் தொண்டை குழிக்கு சற்று கீழே விலா எலும்புகள் சேரும் நெஞ்சு பகுதியின் ஆரம்பத்தில் விரலை வைத்து 30 விநாடிகள் அழுத்தினாலும் விக்கல் நின்று விடுவதை உணரலாம்.
மணிக்கட்டு பகுதியை அழுத்துவது
ரேகை தெரியும் பக்கம் கை பகுதியை திருப்பி மணிக்கட்டுக்கு அருகில் நடுபகுதியில் விரலை வைத்து 30 விநாடிகள் அழுத்தினால் விக்கல் பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நடு முதுகில் அழுத்துவது
விக்கல் ஏற்படும் சமயத்தில் பின் பக்கமாக படுத்து கொண்டு முதுகின் நடுபகுதியில் அதாவது முன்புறம் வயிற்று பகுதிக்கு எதிர் பகுதியில் கையை வைத்து 30 விநாடிகள் அழுத்தினால் விக்கல் உடனே நிற்கும் அதிசயத்தை உணர முடியும்.