கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.
இதையடுத்து வைரஸ் பரவியதாக கூறப்பட்ட பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில்தான் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக் குறைந்து விட்டது.
Using satellite data, this animation shows the reduction of nitrogen dioxide emissions across China from Dec. 20, 2019, to March 16, 2020: https://t.co/oj65nZJhL1 pic.twitter.com/KJx0FQcXG3
— AccuWeather (@accuweather) March 22, 2020
அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்க இதற்கு முன்பாக குற்றஞ்சாட்டி இருந்த போதெல்லாம் அதை மறுத்து வந்தது சீன அரசு.
சில ஆய்வுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவை விடவும் சீனா அதிகமாக வெளியிடுவதாக குற்றம்சாட்டி வந்தனர்.
இத்தனை நாட்களாக இதை சீனா மறுத்து வந்த நிலையில், இதை உண்மை என்று கூறும் அளவுக்கான ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த படம் 2019 டிசம்பர் 20ஆம் திகதி மற்றும் இந்த நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ஆகிய இரு நாட்களில் எடுக்கப்பட்டது.
இந்த இரு நாட்களிலும், சீனாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
தற்போது அங்கு புகைமூட்டம் இல்லாமல் தெளிவான நிலை காணப்படுகிறது. ஆனால் டிசம்பர் மாதத்தில் புகை மிக அதிகமாக, செயற்கைக்கோள் படத்தில், சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
இந்த இரு படங்களையும் பார்க்கும்போது சீனாவில் எந்த அளவு தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் புரிகிறது.
அதேநேரம் புகை வெளியிடவில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதும் உறுதியாகி உள்ளது. சீனாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.