கொசுக்கள் மூலம் கொரோனா தொற்று பரவுமா என்று மக்கள் பலர் சந்தேகம் எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. மொத்தம் 681பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 13பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல் கொசு மூலம் பரவியது என்பதால், கொரோனாவும் கொசு மூலம் பரவலாம் என்று மக்களிடையே பேசப்பட்டு வந்தது.
தொடர்ந்து இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொசுக்களால் எந்தவிதத்திலும் கொரோனா பரவாதென்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்தே வைரஸ் பரவும் என்றும் உறுதி அளித்துள்ளது.
மேலும், அனைவரும் முககவசம் அணிய வேண்டியதில்லை என்றும். சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முக கவசம் அணியலாம் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.