கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலுமொரு இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சி, பரந்தனை சேர்ந்தவரே நேற்று உயரிழந்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ், சுவிற்சர்லாந்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.
யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (32) என்ற இளைஞர் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியிருந்தார். அவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தார். நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார். அவரது உடலை இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.
இதேவேளை, யாழ் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த லோகநாதன் (61) என்ற நபரும் உயிரிழந்தார்.