கொரோனா வைரஸ் இளைஞர்களை தாக்காது என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், அது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பிரான்சில் 16 வயது சிறுமி ஒருவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. தற்போது வரை நாட்டில் 29,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,696 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரங்களில் 365 பேர் கொரோனா வைரஸ் காரணமாக, உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர், இது மருத்துவமனையில் இறந்தவர்களின் தேசிய மொத்த எண்ணிக்கையை 1,696 ஆகக் கொண்டுள்ளது.
இதில் பாரிசை சேர்ந்த Julie A என்ற 16 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். வயதானவர்களையோ அல்லது அடிப்படை உடல்நல நிலைமைகளைக் கொண்டவர்களையோ இந்த நோய் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைய பிரான்ஸ் நாட்டவர் Julie என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
? [INFO LE PARISIEN] Julie, lycéenne de 16 ans, est morte du coronavirus, après avoir été hospitalisée en raison d'une détresse respiratoire
➡ «Personne n’est invincible face à ce virus mutant», se désole sa sœur > https://t.co/jUgjWkdHko pic.twitter.com/mNG4EjROCm— Le Parisien (@le_Parisien) March 27, 2020
இது தாங்க முடியாத வலி என்று சிறுமியின் தாய் Sabine பாரிசின் புறநகரில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் பிரபல ஊடகமான AFP-க்கு கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, Julie-க்கு லேசான இருமல் ஏற்பட்டது, ஆனால் சனிக்கிழமையன்று அவர் மூச்சுத் திணறலை உணரத் தொடங்கினாள்.
இதன் காரணமாக, மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் கொரோனாவுக்கான பல சோதனைகளை மேற்கொண்டார். அதன் பின்னர், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், வியாழக்கிழமை இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே, வைரஸ் இளைஞர்களைப் பாதிக்காது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, எல்லோரையும் போலவே நாங்கள் அதை நம்பினோம், ஆனால் இப்படி நடந்துவிட்டது. அவளுக்கு உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று Sabine வேதனையுடன் கூறியுள்ளார்.