கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த தொற்று தொடர்பாக பணியாற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்களை அமெரிக்கா தமது நாட்டுக்கு அழைத்துள்ளது.
இவர்கள் விசா அனுமதிக்காக அந்ததந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு செல்லுமாறு இராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது.
நேற்று விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளின்படி அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள வெளிநாடுகளின் மருத்துவத்துறை நிபுணர்களின் விசா காலமும் நீடிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு வருடம் முதல் 7 வருடங்களுக்கு தமது விசாவை நீடித்துக்கொள்ளமுடியும் என்றும் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது தீவிரம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வைத்தியத்துறை நிபுணர்களுக்கு தேவைகள் அதிகமாகும் என்று அமெரிக்க மருத்துவ சம்மேளனம் அண்மையில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்திருந்தது.
எனவே அதற்கான மருத்துவதுறை பணியாளர்களை தேடிவேண்டியிருக்கும் என்றும் சம்மேளனம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த முனைப்பை மேற்கொண்டுள்ளதாக தெ நியூ டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.