ரத்த பரிசோதனை மூலம் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
கொரோனாவை கண்டறிய மூக்கு, தொண்டை, நுரையீரல் எனச் சுவாசப் பாதைகளில் ஒட்டியுள்ள துகள்களை எடுத்துச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவை சற்று கடினமான முயற்சி என்பதால் இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
ஆனால் அமெரிக்காவில் விரலிலிருந்து சில சொட்டு ரத்தம் எடுத்து கொரோனா எதிர்ப்பு உயிரிகள் உருவாகியுள்ளனவா எனக் கண்டறியும் யுக்தியும் பின்பற்றப்படுகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான மெலிதான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே இல்லாதவர்களிடம் இம்முறையில் சோதிக்க முடியும். எந்த ஒரு நோய்த் தொற்று மனித உடலில் ஏற்பட்டாலும் அதை எதிர்க்க ஆன்ட்டி பாடி என்ற எதிர் உயிரிகள் உருவாகும்.
மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளைச் சோதித்து அதில் குறிப்பிட்ட எதிர் உயிரிகள் இருந்தால் கொரோனா தாக்கியுள்ளதை உறுதி செய்து எதிர்ப்புத்திறனை அறிய முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
இதனால், எளிமையாகவும் விரைவானதாகவும் இருப்பதால் இந்த முறையில் கொரோனாவை சோதிக்கப் பல ஆய்வகங்கள் முயல்கின்றன.
இவ்வகையில் ரத்தப் பரிசோதனை செய்யும் உபகரண தொகுப்பு விலை பத்து டாலர்களுக்குக் கீழேதான். அதாவது 750 ரூபாய்க்கும் குறைவு எனக் கூறுகிறது கலிஃபோர்னியாவின் பயோமெரிக்கா ஆய்வகம்.
இந்த முறை எளிமை, விரைவு, மலிவு என 3 சாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதால், ரத்தப் பரிசோதனை உபகரணங்களை வாங்க வெளிநாடுகளிலிருந்தும் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.