சவுதி அரேபியாவில் வணிக வளாகம் ஒன்றில் கொரோனா தொற்றுடன் தள்ளுவண்டிகள் மற்றும் கதவுகளில் உமிழ்ந்த நபர் ஒருவர் மரண தண்டனையை எதிர்கொள்கிறார்.
இந்த சம்பவம் வடக்கு சவுதி அரேபிய மாகாணமான ஹெயிலில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நடந்தது,
பெயர் வெளியிடப்படாத அந்த சந்தேக நபர் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் வெளிநாட்டவர் என தெரிய வந்த நிலையில், எந்த நாட்டவர் என்ற தகவலை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த வணிக வளாகத்தை பயன்படுத்திய அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மட்டுமின்றி அந்த நபர் சென்று வந்த பகுதிகளை கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என சவுதி அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 27 வரை, சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,012 எனவும் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.