திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதிக்கு சென்ற இரு தமிழ் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு தமிழ் குடும்பத்தினரும் கொழும்பில் இருந்து பொலிஸ் பாதுப்புடன் நேற்று இரவு 8.00 மணி அளவில் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது அப்பகுதி மக்களால் அவர்கள் வந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் இக்காலத்தில் இவ் குற்றசெயலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன்
குறித்த குடும்பத்தினர் அவர்களது வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.