டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகும். இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் பல பிரச்சனைகள் நடக்க வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் டெல்லியில் இருந்து 2 லட்சம் பேர் உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். டெல்லியில் வேலை இல்லாத காரணத்தால் தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
முக்கியமாக இவர்கள் நடந்தே டெல்லியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டள்ளது. சிவில் வார் நடக்கும் சமயங்களில் மக்கள் இப்படித்தான் கூட்டம் கூட்டமாக உள்நாட்டு அகதிகள் போல வெளியேறுவார்கள். கிரேட் பிளேக் நோய் தாக்கிய போதும் மக்கள் இப்படித்தான் இடம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போரிலும் இதுதான் நடந்தது. தற்போது இந்தியாவிலும் கொரோனா காலத்தில் இதுதான் நடக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மாநில அரசு மீதும் மத்திய அரசு மீதும் நம்பிக்கை இழப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது . மக்கள் அரசு மீது நம்பிக்கை இழப்பதற்கான முதல் அறிகுறிதான் இந்த டெல்லி இடம்பெயர்வு. டெல்லியில் இருந்தால் வாழ முடியாது என்று சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு மக்கள் லட்சக்கணக்கில் வெளியேறுகின்றனர்.
Pandemonium struck New Delhi over the weekend as thousands of migrant workers, left without food and shelter due to India’s coronavirus lockdown, fled to their home villages https://t.co/YYmDa0wYL9 pic.twitter.com/OWfkqy5mSh
— Reuters (@Reuters) March 29, 2020