கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த வைரஸ் குறித்து, 2006 முதல் 2012 ஆண்டுகளில் Ph.D செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் பவித்ரா வேங்கட கோபாலன் அளிக்கும் விழிப்புணர்வு என்ன என்பதை தற்போது காணலாம்.
- COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
- 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ் தான் இது.
- இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
- எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
- சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
- பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
- குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
- ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
- உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
- சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
- நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
- பாதிக்கப்பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப்படும்.
- பதற்றம் தேவையே இல்லை.
புரளி உண்மையானதா?
வெயிலில் வராது.
வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.
அசைவம் சாப்பிட்டால் வரும்
ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.
நிறைய தண்ணீர் குடித்தால் வராது
தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.
இளவயதினருக்கு வராது
வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)
கிராமங்களில் வராது.
காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.