பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி வெளியில் வந்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கைக்கு எடுக்குமாறு பொலிஸாருக்கு வியாழக்கிழமையன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமீபத்தில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அதிகாரங்களின் கீழ், தற்போது 13 வயது சிறுவனை கைது செய்திருப்பதாக லீட்ஸ் நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
விதிகளை மீறி வெளியில் வந்த அந்த சிறுவன், பொலிஸாருக்கு எந்த விவரங்களையும் கொடுக்க மறுத்துவிட்டதாலே வேறு வழியில்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.