Loading...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் நாட்டில் 269 பேருக்கு இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர்.
Loading...
நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி நடக்கும் நபர்களுக்கு கடுமையான அபாரதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்றவைகளில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கல்வி
- பொது மக்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
- ஆன்லைன் மூலமாக கற்பித்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- எஸ்.ஏ.டி.எஸ் (2 மற்றும் 6 ஆம் வகுப்பு), ஜி.ஜி.எஸ்.சி (11 ஆம் வகுப்பு) மற்றும் ஏ லெவல் (13 ஆம் வகுப்பு) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஆண்டு முழுவதும் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். மாணவர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம்.
- பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
போக்குவரத்து
- மத்திய லண்டனுக்கு முக்கிய போக்குவரத்து முறையான ‘ட்யூப்ஸ்’ எனும் நிலத்தடி ரயில் மற்றும் பேருந்து சேவைகள் குறிப்பிட்ட அளவு இயக்கப்படுகின்றன.
- கார் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அத்தியாவசியத்திற்காக மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
- புதிய சட்டத்தின்படி, காவல்துறையினருக்கு ஸ்பாட் செக் செய்ய அதிகாரம் மற்றும் 30 பவுண்ட் முதல் 1000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
- ஹீத்ரோ விமான நிலையம் திறந்துள்ளது. விமான சேவை இருந்த போதிலும் ஒரு சில விமான நிறுவனங்கள் இயங்கவில்லை.
மருத்துவம்
- வழக்கமான பொது நோயாளிகள் சேவை ரத்து செய்யப்படுகின்றன.
- பொது நோயாளிகள் சேவை ரத்து செய்யப்படுவதாக பொது மக்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
- கொரோனா அறிகுறி அல்லது வெளிநாட்டு பயணம் சென்றிருந்தால் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அரசு ஆலோசனை.
- கொரோனா வைரஸ் பரிசோதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது முக்கியமானவர்களுக்கு மட்டுமே அனுமதி (பிரதமர் மற்றும் சுகாதாரச் செயலாளர் போன்றோருக்கு சில விதிவிலக்குகள் உள்ளன).
- அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொது
- அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் சில பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
- மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற அல்லது உடற்பயிற்சி செய்ய ஒரு நாளில் 1 முறை வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.
- சுயதொழில் செய்பவர்களுக்கு / தனியார் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கும். 2500 பவுண்ட்டுக்கு குறைவாக ஊதியம் இருந்தால் ஊதியத்தில் 80 சதவீதம் வழங்கப்படும்.
- வயதானவர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை ஏற்பாடு செய்து வீட்டிற்கே வந்து கொடுக்கும்.
- ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குகிறது. இராணுவம், 4000 படுக்கைகளுடன் லண்டனில் மருத்துவமனையை உருவாக்கி வருகிறது.
- முதியவர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினருக்கு அனைத்து முக்கிய டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் ஷாப்பிங் செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.
- அனைத்து விசா நியமனங்களும் ரத்து செய்யப்பட்டு விசா அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
- முதியவர்களுக்கு உதவி செய்ய மற்றும் பிற தேவைகளுக்கு அரசு தன்னார்வலர்களை அழைத்துள்ளது. அதன்படி, 2.50 லட்சம் பேர் தேவைப்பட்ட நிலையில், 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
Loading...