மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கூலி வேலையாளர்க்கு இலவசமாக உணவுப்பொருள் பொதிகள் வழங்க அரசாங்க அதிபர் நடவடிக்கை.
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களை மட்டு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு முன்வந்தது.
சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் வைத்து நேற்று (30) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.