Loading...
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கான கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு மானிப்பாய் பிரதேச சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள கிருமி தொற்றாத பாதுகாப்பு அங்கிகளை அணிந்து பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் குறித்த கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Loading...
மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 8 வீடுகளில் 8 குடும்பங்களை சேர்ந்த 34 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Loading...