Loading...
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதிவரை 3 வாரங்களில் தவணையிடப்பட்ட வழக்குகள் இடம்பெறும் மறு தவணைகள் நீதிமன்றப் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் வழக்குகள் தவிர்த்த ஏனைய வழக்குகளின் மறு தவணை விவரங்களே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
Loading...
- மார்ச் 16ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 15ம் திகதி.
- மார்ச் 17ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 16ம் திகதி.
- மார்ச் 18ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 17ம் திகதி.
- மார்ச் 19ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 18ம் திகதி.
- மார்ச் 20ம் திகதி இடம்பெறவிருந்த
வழக்குகள் ஜூன் மாதம் 19ம் திகதி. - மார்ச் 23ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 22ம் திகதி.
- மார்ச் 24ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 23ம் திகதி.
- மார்ச் 25ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 24ம் திகதி.
- மார்ச் 26ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 25ம் திகதி.
- மார்ச் 27ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 26ம் திகதி.
- மார்ச் 30ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 29ம் திகதி.
- மார்ச் 31ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 30ம் திகதி.
- ஏப்ரல் 01ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூலை மாதம் 01ம் திகதி.
- ஏப்ரல் 02ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூலை மாதம் 02ம் திகதி.
- ஏப்ரல் 03ம் திகதி இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூலை மாதம் 03ம் திகதி.
ஆக மறு தவணையிடப்பட்டுள்ளது.
எனவே சந்தேக நபர்கள், வழக்காளிகள், சாட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த ஒழுங்கில் வழக்குகள் மறு தவணையிடப்பட்டுள்ளமையை பின்பற்றுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 20 பேர் நேற்று (30) சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Loading...