நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். மாறுபட்ட கதைகள் தேர்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படம் வெளியிட்டிருக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு தள்ளி வைக்கபட்டுள்ளது.
இந்நிலையயில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறாரகள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.