மேற்குவங்கத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் 7 பேர் அவர்களின் வீடுகளில் இடவசதி போதாமையினால் மரத்தில் ஏறி தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் சென்னை மோட்டார் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இவர்கள் வேலைபார்த்த நிறுவனம் மூடப்பட்டதை தொடர்ந்து கடந்த 24ம் திகதி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் பலாரம்பூர் கிராமத்தை சேர்ந்த இவர்கள் கிராம சுகாதார மருத்துவர்களிடம் தங்களை பரிசோதித்து கொண்டனர்.
மருத்துவர்கள் இவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
பழங்குடியின இளைஞர்களின் வீட்டில் போதுமான வசதி இல்லாததால் கிராமத்திற்கு வெளியே பெரிய மரத்தின் கிளையில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
மரக்கிளைகள் நடுவே மரப்பலகை கொண்டு படுக்கை அமைத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்களுக்கு மரத்திற்கு கீழே உணவு வைத்தப்பின் அவர்கள் கீழே இறங்கி வந்து தங்கள் உணவை எடுத்துக் கொண்டு வருவகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.