Loading...
ஏப்ரல் மாதத்தில் மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் உச்சமடைய போகிறார்.
ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி, புதன் மீனம் ராசியில் நீசம், மகரம் ராசியில் குரு நீசபங்க யோகம் சனி ஆட்சி, செவ்வாய் உச்சம் மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
Loading...
கிரக மாற்றங்கள்
- இம்மாதம் 1ம் தேதி புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
- இம்மாதம் 13ம் தேதி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
- இம்மாதம் 18ம் தேதி புதன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
- இம்மாதம் 29ம் தேதி சனி வக்ரம் ஆரம்பம்.
இதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் என்னென்ன பண்டிகைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
- ஏப்ரல் 2 வியாழக்கிழமை ஸ்ரீ ராம நவமி
- ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை தர்மராஜா தசமி
- ஏப்ரல் 4 சனிக்கிழமை காமத ஏகாதசி
- ஏப்ரல் 5 ஞாயிறு கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம்
- ஏப்ரல் 6 திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி
- ஏப்ரல் 6 திங்கட்கிழமை பங்குனி உத்திரம்
- ஏப்ரல் 9 வியாழன்கிழமை காரைக்கால் அம்மையார் விவாகம்
- ஏப்ரல் 11 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
- ஏப்ரல் 12 ஞாயிறு கிழமை வராஹர் ஜெயந்தி
- ஏப்ரல் 14 செவ்வாய் கிழமை விஷு புண்யகாலம் தமிழ் வருடப்பிறப்பு
- ஏப்ரல் 18 சனிக்கிழமை பாப விமோசினி ஏகாதசி
- ஏப்ரல் 20 திங்கட்கிழமை சோம பிரதோஷம் மத்ஸ்ய ஜெயந்தி
- ஏப்ரல் 22 புதன்கிழமை சித்திரை அமாவாசை
- ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாஸ்து நாள்
- ஏப்ரல் 25 சனிக்கிழமை கிருத்திகை ராஜமாதங்கி ஜெயந்தி
- ஏப்ரல் 26 ஞாயிறு கிழமை அட்சய திருதியை
- ஏப்ரல் 28 ஸ்ரீ சங்கர ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
Loading...