உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதன் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில் 42, 016 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 854,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலக அளவில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில், உலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்றினால் அதிகபட்சமாக இத்தாலியில் 12,408 பேரும், ஸ்பெயினில் 8,464 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துவருகிறது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரையில் 185,270 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் 95,923 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதித்துள்ளனர். ஈரானில் 44,605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 25150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,789 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.