Loading...
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் திரும்பிய 3 இந்தோனேசிய தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சக்கர வாகனத்தில் தனித்தனியே சென்ற இவர்களை சந்தேகத்தின் பேரில் காவல்துறை நிறுத்திய நிலையில், இவர்கள் மலேசியாவிலிருந்து படகு மூலம் திரும்பியது அம்பலமாகியுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியாவிலிருந்து வெளியேறிய இவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Loading...
இதில் இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் இத்தொழிலாளர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக மலேசியாவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தோனேசியா திரும்பியதாக இத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...