கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர், வைத்தியாலையிலிருந்து வெளியிட்ட டிக்டாக வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 18-ம் தேதி, காய்ச்சல் அறிகுறியுடன் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் அப்பெண், அவரது சோகம் மறைய டிக் டாக்கில் நான்கு வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு மருத்துவ உதவிகள் புரிந்த ஒப்பந்த மருத்துவ தூய்மைப் பணியாளர்கள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியதால், அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்ட டிக் டாக் வீடியோ உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது.
”தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்திருக்கிறது. அவளால் எங்களது குடும்பத்தை தனிமைபடுத்தி வைத்திருக்கிறார்கள். தன்னால்தானே தனது குடும்பத்தாருக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்று மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். நாள் முழுவதும் தனிமையில் இருப்பதால் வேறு வழியில்லாமல், வேதனையைப் போக்க டிக்டாக் வீடியோ பதிவிட்டுள்ளார். சோகமாய்ப் பாடி, தனது மனதை அமைதிப்படுத்தியிருக்கிறார்” என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.