நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நாராஹேன்பிட்டியில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பில் சுகாதாரச சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள், மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கருவிகள், தொற்று நீக்கிகள், முகக்கவசம், ஆகியனவற்றை அனைத்து மாகாணங்களுக்கும் துரிதகதியில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுகாதார சேவையாளர்கள் எதிர்நோக்கியுள்ள போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.