இரண்டு மாதங்களுக்கு முன் தமிழச்சியினை கேவலப்படுத்திய மக்கள் இன்று அவருடைய கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக மக்களுக்கு தமிழச்சியின் வேண்டுக்கோள் பின்வருமாறு அமைந்துள்ளது.
நடிகை கெளதமி மோடிக்கு கடிதம் எழுத வைத்ததன் மூலம் ‘மோடிக்கும் ஜெயலலிதாவின் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்ற கருத்தை பா.ஜ.க உருவாக்க முனைந்துள்ளது. அதற்கு கெளதமி விலை போகிறாரே தவிர நீதிக்கான குரலாக அது இல்லை…
அதே தினத்தில், “ஜெயலலிதாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தது சசிகலாதான். அவள் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தால் பெரும் போராட்டம் நடத்துவோம். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் இருக்க வேண்டும்” என்று பாஜக பூணூல் பிரதி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
அதிமுகவிற்குள் பிளவு ஏற்படுத்தி இன்னும் சில வாரங்களில் ஜெயலலிதா / சசிகலா சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதைப் போல் சசிகலாவையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்’ என்ன நோக்கத்துடனேயே பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் திரிகிறது.
முக்கியமாக ஆர்எஸ்எஸ் பினாமி சீமான், “நாங்கள் கூறியதைப் போலவே தமிழ்நாட்டை தற்போது ஆள்வது தமிழன்தான்” என்று எடுபிடி பன்னீர் செல்வத்திற்கு வக்கலாத்து வாங்குகிறார்.
இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினரின் திட்டப்படி இயக்கப்படுகிறார்கள்.
தந்தி தொலைகாட்சியில் ஜெயலலிதா முகத்தில் உள்ள நான்கு புள்ளிகள் குறித்த விவாத நிகழ்ச்சியை சீமான் ஆதரிக்கிறார். அதில் ‘எந்த மர்மமும் இல்லை’ என்று வக்கலாத்து வாங்குகிறார்.
இன்னும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. இறந்தவருடைய உடலை பாதுகாக்கும் கெமிக்கல் குறித்து பேசுகிறது. அப்படியான ஒரு விளக்கத்தை இப்பதிவுடன் உள்ளது. இதுதான் உண்மை!
இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட ஜெயலலிதாவின் உடல் எப்படி பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு எதிர்கட்சிகள் மெளனம் கலைத்து போராட வேண்டும். பொது ஊடகங்கள் பேச வேண்டும். குறைந்த பட்சம் ஜெயலலிதா எப்படி அப்போலோவிற்குள் கொண்டு செல்லப்பட்டார் என்ற காட்சியை தமிழர் நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் என்று இயக்கங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். இல்லாவிட்டால் மேனாமினுக்கி நடிகைகளும், பொழப்புக்கு அரசியலில் நுழைந்த நடிகர்களும் நமக்கு அரசியல் பாடம் நடத்துவதை சகித்து கொண்டிருக்க வேண்டும்.
“மக்களதிகாரத்தை தீர்மானிப்பவர்கள் நடிகர்/நடிகைகள் அல்ல, மக்கள்” என்பதை நாம் எந்த அளவுக்கு சீக்கிரமாக உணர்ந்து கொள்கிறோமோ அந்தளவில் நடிகர்களின் அரசியல் நுழைவையும் புறக்கணித்தால் மட்டுமே தமிழ் சமூகம் உருப்படும்.
இப்படிக்கு
தமிழச்சி