Loading...
இலங்கையிலிருந்து சென்னை வரை பயணிக்கவிருந்த விமானங்கள் அனைத்தும் இன்று (13) நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் சென்னை விமான நிலையம் உட்பட அப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை மாற்றத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
Loading...
வர்தா புயல் நேற்று (12) மாலை சென்னை நகருக்குள் மீண்டும் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் ஊடகத்துறை முகாமையாளர் திலிப் வீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
Loading...